×

பற்களை பிடுங்கிய விவகாரம் 4 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை: 3 மணி நேரம் நடந்தது

நெல்லை: பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 4 போலீசாரிடம் சுமார் 3 மணி நேரம் சிபிசிஐடி தரப்பில் விசாரணை நடந்தது. நெல்லை மாவட்டம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் போலீஸ் ஸ்டேஷன்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக அம்பை ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நவராஜ், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோர் கடந்த 21ம் தேதி இரவு கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.

பாதிக்கப்பட்ட பாளை கேடிசி நகரை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சுபாஷ் (28) கடந்த 4 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜராகி, சம்பவம் குறித்து நடித்துக் காட்டினார். இதைத் தொடர்ந்து கல்லிடைகுறிச்சியை சேர்ந்த 4 போலீசாரிடம் நேற்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் நடந்தது. விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் போலீசாரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி வருகின்றனர். இதனால் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

The post பற்களை பிடுங்கிய விவகாரம் 4 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை: 3 மணி நேரம் நடந்தது appeared first on Dinakaran.

Tags : CBCID ,Nellai ,Nellie… ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...